2025 ஜூலை 31, வியாழக்கிழமை

இலங்கைத் தமிழர்களை அகதிகளாக அறிவிக்க வேண்டும்

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 26 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகள் அனைவரும் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடியேறியவர்கள் என்றும் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க முடியாது‘ என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

 இந்நிலையில்  “வாழ வழியின்றி வந்தவர்களை அகதிகளாக அறிவிக்காமல், சட்டவிரோத குடியேறிகளாகவே வைத்திருப்பது இந்தியா போன்ற, பன்னாட்டு அரங்கில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் நாட்டுக்கு அழகல்ல”  என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் “மனிதநேய அடிப்படையில் தஞ்சம் தேடி தமிழ் நாட்டிற்கு வரும் இலங்கைத் தமிழர்களை அகதிகளாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும், சட்டப்பூர்வ உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்குவதற்கு அனுமதிக்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .