Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Mayu / 2024 ஒக்டோபர் 08 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள கிட்வாய் நகர் பகதியில் ராஜீவ் துபே என்பவர் அவரது மனைவி ரேஷ்மி என்பவருடன் இணைந்து ‘மறுமலர்ச்சி உலகம்’ என்ற பெயரில் ஆக்சிஜன் தெரபி கிளினிக் ஒன்றை தொடங்கினார்.
இந்த தெரப்பி மையத்தில் தங்களிடம் பிரத்யேகமாக டைம் மெஷின் ஒன்று இருப்பதாகவும் அதில் சென்று வந்தால் குறுகிய காலத்தில் இளமைக்கு திரும்ப முடியும் என்றும் கூறி விளம்பரம் செய்துள்ளனர். 60 வயது நபர் கூட 25 வயது நபர் போல் மாறி விடுவார் எனவும் தெரிவித்துள்ளனர்.
அந்த மெஷினை இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்திருப்பதாகவும் தெரிவித்த நிலையில், அந்த கிளினிக்கிற்கு படை எடுக்க ஆரம்பித்துள்ளனர்.
வயதானவர்கள் பலர் அங்கு குவிய, அவர்களிடம் பல காரணங்களை சொல்லி மாசுதான் நீங்கள் வயதான தோற்றம் அடைய காரணம் இளமையான தோற்றத்திற்கு சென்று விடலாம் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
ஆக்சிஜன் தெரப்பியில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே டைம் மெஷினில் செல்ல தகுதி பெற்றவர்கள் என்றும் நிபந்தனை விதித்துள்ளனர். இந்த ஆக்சிஜன் தெரப்பியை 10 முறை செய்து கொள்ள 6 ஆயிரம் ரூபாயும், மூன்று ஆண்டுகள் செய்து கொள்ள 90 ஆயிரம் ரூபாயும் வசூலித்துள்ளனர். ஆனால் கடைசி வரை அந்த டைம் மெஷினை கண்ணில் காட்டவே இல்லை என பணம் கொடுத்தவர்கள் தெரிவித்துள்ளனர். குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்மைய, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அவர்கள் ஏற்கனவே வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுவிட்டதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
17 minute ago
30 minute ago
32 minute ago