Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூன் 26 , பி.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாடிக்கையாளர்களின் பணத்தை கையாடல் செய்து, 'டேட்டிங்'ஆப் மூலம் பழக்கமான இளம்பெண்ணிடம் ரூ.5.7 கோடியை வங்கி மேலாளர் இழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அந்த வங்கி மேலாளரை கைது செய்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு அனுமந்தநகர் பகுதியில் இந்தியன் வங்கியின் மேலாளராக பணிபுரிந்து வருகின்ற வங்கி மேலாளர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்த வங்கியின் வாடிக்கையாளரான இளம் பெண்ணொருவர் தனது கணக்கில் ரூ.1.3 கோடியை வைப்பிலிட்டுள்ளார். இந்த தொகையை வைத்து அவர் ரூ.75 லட்சம் கடனாகவும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், அந்த பெண்ணின் ஆவணங்களை போலியாக பயன்படுத்தி பல கட்ட தவணைகளாக ரூ.5.7 கோடி கடனாக பெறப்பட்டுள்ளது. இந்த விவரம் அந்தப் பெண்ணுக்கு தெரியவரவே, இது குறித்து முறைப்பாடு செய்துள்ளார். அதுகுறித்த விசாரணையின் வங்கியின் மேலாளரே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
46 minute ago
28 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
28 Jul 2025