2025 ஜூலை 12, சனிக்கிழமை

இளம்பெண்களை மதம் மாற்றிய பாபாவின் சொகுசு பங்களா இடிப்பு

Editorial   / 2025 ஜூலை 09 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

உ.பி. தலைநகர் லக்​னோ​வில் கடந்த 3-ம் திகதி கோமதி நகரில் மீண்​டும் தாய் மதம் திரும்​பும் நிகழ்ச்சி நடை​பெற்​றது. இதில், முஸ்​லி​மாக மதம் மாறிய 12 பேர் மீண்​டும் தாய் மதமான இந்து மதத்​துக்கு திரும்​பினர். இந்நிகழ்ச்சியை விஷ்வ இந்து ரக்ஷா பரிஷத் நடத்​தியது. அப்​போது பல்​ராம்​பூரை சேர்ந்த ஜுங்​கூர் பாபா என்​பவர் தங்​களை முஸ்​லிம் மதத்​துக்கு மாற்​றிய​தாக பலர் தெரி​வித்​தனர்.

ஏற்​கெனவே, மதம் மாற்ற புகாரில் ஜுங்​கூர் பாபா சிக்​கி, கடந்த நவம்​பர் 2024-ம் ஆண்டு தேடப்​பட்டு வந்​தவர். இதனால், உ.பி. அதிரடி படை (ஏடிஎஸ்) ஜுங்​கூர் உள்​ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்​தது. கோமதி நகர் நிகழ்ச்​சிக்கு மறு​நாள் ஜுங்​கூர் பாபா, அவரது மகன் ஹுசைன் மற்​றும் நண்​பர்​கள் நீத்து நவீன் ரொஹரா (எ) நஸ்ரீன், அவரது கணவர் நவீன் ரொஹரா ஆகியோர் கைது செய்​யப்​பட்​டனர். இவர்​களிடம் நடந்த விசா​ரணை​யில் பல அதிர்ச்சி தகவல்​கள் வெளி​யாகி வரு​கின்​றன.

ஜுங்​கூர் பாபா கும்​பல், பல மாநிலங்​களில் இளம்​பெண்​களை மதம் மாற்​றம் செய்து வந்​துள்​ளது. மதம் மாறு​பவர்​களுக்கு பணம், வேலை, தொழில் உள்​ளிட்​ட​வற்றை வழங்​கு​வ​தாக ஆசை வார்த்​தைகள் கூறப்​பட்​டுள்​ளன. இந்த மதம் மாற்​றத்​துக்​காக இந்​துக்​களில் உள்ள சமூகத்​தினரை பொறுத்து பாபா கும்​பலுக்கு ரூ.5 லட்​சம் முதல் ரூ.20 லட்​சங்​கள் வரை கிடைத்​துள்​ளது.

மேலும் ஜுங்​கூர் பாபாவுக்கு உ.பி.​யில் ஒரு கல்​லூரி மற்​றும் பல நகரங்​களில் ரூ.100 கோடிக்கு மேல் சொத்​துகள் இருப்​பதும் தெரிய வந்​துள்​ளது. இதையடுத்து அவரிடம் அமலாக்க துறை​யும் விசா​ரணையை தொடங்கி உள்​ளது. கடந்த 10 ஆண்​டு​களாக ஜுங்​கூர் பாபா மதம்மாற்ற வேலைகளில் ஈடு​பட்டு வந்​துள்​ளார். இவருடைய கும்​பலை சேர்ந்த பலரும் அரபு நாடு​களுக்கு பலமுறை சென்று வந்​துள்​ளனர்.

அரபு நாடு​களில் இருந்து உ.பி.​யின் ஆஸம்​கர், முரா​தா​பாத், அவுரய்​யா, சித்​தார்த் நகர் உள்​ளிட்ட சில நகரங்​களை சேர்ந்​தவர்​கள் மூல​மாக​வும், இந்த பாபா கும்​பலுக்கு பணம் கிடைத்​துள்​ளது. இதுதொடர்​பாக 14 பேர் தேடப்​பட்டு வரு​கின்​றனர். ஜுங்​கூர் பாபா​வின் நெருங்​கிய தோழி நஸ்ரீனுக்கு உ.பி. பல்​ராம்​பூரின் மாதேபூர் கிராமத்​தில் அரசு நிலத்தை ஆக்​கிரமித்து சொகுசு பங்​களா கட்​டப்​பட்​டுள்​ளது. இதற்கு ஏற்​கெனவே நோட்​டீஸ்​ அளித்​து ​கால அவ​காசம்​ வழங்​கிய நிலை​யில்​ உ.பி. அரசு அந்​த பங்​களாவை புல்​டோச​ரால்​ இடித்​து தரைமட்​ட​மாக்​கியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .