2025 ஜூலை 24, வியாழக்கிழமை

இளைஞனின் உயிரைப் பறித்த யுவதியின் சவப்பெட்டி

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 21 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 திருவொற்றியூரைச் சேர்ந்தவர் நந்தினி. இவருடைய மகள் அபிநயா. 16 வயதான இவர் சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பாடசாலையில் கல்வி கற்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 14 ஆம் திகதி அபிநயா  காதில் அறுவை சிகிச்சையொன்றைச் செய்வதற்காக  அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சையின்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்படவே அவர்  எதிர்பாராத விதமாக கடந்த 17ஆம் திகதி உயிரிழந்தார்.

இதனையடுத்து இறுதி அஞ்சலிக்காக, அபியாவின் உடல் நேற்றுமுன்தினம் அவரது வீட்டில், மின்சார குளிர்சாதன சவப்பெட்டியொன்றில் வைக்கப்பட்டிருந்துள்ளது.

அப்போது திடீரென குறித்த சவப்பெட்டியில் மின்சார கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அப் பெட்டியை தொட்டபடி நின்று மாணவியின் உடலை பார்த்து அழுது கொண்டிருந்த 20 பேர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மூவருக்கு பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவர்கள்  உடனடியாக அருகில் உள்ள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த மூவரில் அபிநயாவின்  உறவினரான அஜித் என்ற 19 வயதான இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவமானது  அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .