Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 மார்ச் 01 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தரபிரதேசம் மாநிலம், அவுரங்காபாத்தைச் சேர்ந்தவர் முகமது ஆரிஃப். இவர் அண்மையில் வீதியில் சென்றுகொண்டிருந்தபோது காயமடைந்த நிலையில் பறக்க முடியாமல் தவித்த கொக்கொன்றைப் பார்த்துள்ளார்.
இதனையடுத்து குறித்த கொக்கினைத் தனது வீட்டுக்கு எடுத்துச் சென்ற அவர், அதற்கு மருந்து மற்றும் உணவளித்து அதனைக் குணப்படுத்தியுள்ளார்.
கொக்கு நலமடைந்ததும் அதனுடைய நண்பர்களுடன் பறந்துவிடும் என ஆரிஃப் நினைத்துள்ள நிலையில் அக்கொக்கானது மற்ற கொக்குகளுடன் இருப்பதை விட தனக்கு உதவிய ஆரிஃப்புடன் இருப்பதையே விரும்பியுள்ளது.
இதனால் அக்கொக்கானது எப்போதும் அவரது தோள் மீதே அமர்ந்து கொள்வதாகவும், அவர் வீதியில் செல்லும் போது நிழல் போல் அவரைப் பின் தொடர்ந்து செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சில நேரங்களில் 40 கிலோமீற்றர் கூட சலிக்காமல் ஆரிஃபை அது பின்தொடர்ந்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இது குறித்து ஆரிப் கருத்துத் தெரிவிக்கையில் "அவனது நண்பர்கள் அவனை அழைத்துச் செல்ல அவ்வப்போது வந்தாலும் அவன் போவதில்லை. வராண்டாவில் ஒளிந்துகொள்வான். அவர்களுடன் விளையாட சென்றாலும் மாலையில் மீண்டும் என்னிடம் வந்துவிடுவான்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி அனைவரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago