2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

இளையராஜாவுக்கு இன்று அனுமதி

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 28 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை

இளையராஜாவை இரு தரப்பு வக்கீல்களும் கலந்தாலோசித்து இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணிக்குள் அனுமதிப்பது என்று முடிவு செய்தனர்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் ஓர் அரங்கை இசையமைப்பாளர் இளையராஜா 35 ஆண்டுகளுக்கு மேலாக ‘ரிக்கார்டிங் தியேட்டராக’ பயன்படுத்தி வந்தார்.

இந்தநிலையில் அந்த அரங்கை வேறு தேவைக்குப் பயன்படுத்த பிரசாத் ஸ்டூடியோ முடிவு செய்தது. அதனால் ஸ்டூடியோ நிர்வாகத்துடன் இளையராஜாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இளையராஜாவை அந்த இடத்திலிருந்து ஸ்டூடியோ நிர்வாகம் வெளியேற்றியது. இதுகுறித்து சென்னை பொலிஸிலும் நீதிமன்றத்திலும்  இளையராஜா புகார் செய்தார்.

இந்தநிலையில், பிரசாத் ஸ்டூடியோவில் தான் வைத்திருந்த பொருள்களையும், இசைக்குறிப்புகளையும் எடுத்துக்கொள்ள அனுமதி கோரி சென்னை உச்ச நீதிமன்றத்தில் இளையராஜா வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், இரு தரப்பினரையும் சமரசமாகச் செல்லும்படி அறிவுறுத் தினார். அதற்கு இரு தரப்பினரும் உடன்பட்டனர்.

அதைத் தொடர்ந்து நீதிபதி, பிரசாத் ஸ்டூடியோ வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இளையராஜாவை அனுமதிக்கவேண்டும். அவர் பயன்படுத்திய இடத்தில் தியானம் செய்யவும், பொருட்களை எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்க வேண்டும். எப்போது அனுமதிப்பது என்பது குறித்து இரு தரப்பு வக்கீல்களும் பேசி முடிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதன்படி ஸ்டூடியோ நிர்வாகம் சார்பில் வக்கீல் அப்துல் சலீம், இளையராஜா சார்பில் வக்கீல் தியாகராஜன் ஆகியோர் கலந்து ஆலோசனை செய்து இளையராஜாவை இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அனுமதிப்பது என்று முடிவு செய்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .