2025 மே 01, வியாழக்கிழமை

இஸ்லாமியர்களுக்கு விஜய் ரமழான் வாழ்த்து

Editorial   / 2025 மார்ச் 31 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில் ரமழான் கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு தமிழக வெற்றிக் கழக (தவெக0 தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதனையொட்டி தவெக தலைவர் விஜய் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,

“நோன்பிருந்து உறவுகளுடன், நட்பு நெஞ்சங்களிடன் அன்பைப் பரிமாறி ஈகைத் திருநாளாம் ரமழான் திருநாளைக் கொண்டாடும், உலகெங்கும் வாழும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள். இந்நாளில் அனைவரிடமும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம், ஆகியவை வளர்பிறையாக வளர வாழ்த்தி மகிழ்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

வாழ்த்து அட்டையாக இதனை அவர் பகிர்ந்துள்ளார். அந்த வாழ்த்து அட்டையில் வேலுநாச்சியார், காமராஜர், பெரியார், அம்பேத்கர், அஞ்சலையம்மாள் படங்கள் இடம்பெற்றுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .