2026 மார்ச் 07, சனிக்கிழமை

இஸ்லாமியர்களை வாக்கு வங்கியாக பயன்படுத்துகிறது திமுக

A.K.M. Ramzy   / 2021 மார்ச் 29 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேலூர்

பாஜகவின் நட்சத்திர பிரசாரகர் பட்டியலில் இடம் பிடித்துள்ள, தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் தலைவர் வேலூர் இப்ராஹிம், ‘தனது பிரசார அனுபவங்கள்’ குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:

தேசிய அளவில், தேசத்தின் வளர்ச்சி, பாதுகாப்பு, ஒட்டுமொத்த இந்தியர்களை ஒருங்கிணைக்கும் கட்சியாக உள்ள பாஜகவின் ஆட்சி தொடர வேண்டும் என ஒரு இஸ்லாமிய அமைப்பின் தலைவராக கடந்த 3 ஆண்டுகளாக, அக்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறேன். பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளை மையப்படுத்தி தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளேன்.

நான் இஸ்லாமிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள எஸ்டிபிஐ, பிஎப்ஐ போன்ற சில அடிப்படைவாத கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதை காரணம் காட்டி, எனது உயிருக்கு ஆபத்து என பொலிஸாரும்  என்னைத் தடுக்கின்றனர். அவர்கள் மீது பொலிஸார்  நடவடிக்கை எடுக்காமல், எனது உயிருக்கு அச்சுறுத்தல் என சுட்டிக்காட்டியே என்னைப் பிரசாரம் செய்ய விடாமல் தடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .