2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

ஈவிரக்கமின்றி பீட்சா பணியாளரைத் தாக்கிய பெண்கள்

Freelancer   / 2022 ஜூன் 16 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியில் பீட்சா வழங்க வந்த இளம்பெண்ணை, நான்கு பெண்கள் சூழ்ந்து பாரபட்சமின்றி தாக்கிய காணொலிப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபகாலமாக உணவு வழங்கி வரும் ஊழியர்களை தாக்குவதும் துன்புறுத்துவதும் போன்ற நிகழ்வுகள் தொடர்கதையாக நடந்து வருகிறது அதன் தொடர்ச்சியாக இந்தூரில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

டோமினோஸ் பீட்சா வழங்க வந்த இளம்பெண் ஒருவரை நான்கு பெண்கள் சூழ்ந்து கொடூரமாக தாக்கியுள்ளனர். குச்சிகளால் அடித்தும் வலி தாங்க முடியாமல் கீழே விழுந்த பெண்ணை சிறிதும் கருணை காட்டாமல் மேலும் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இந்த டோமினோஸ் பீட்சா வழங்க வந்த இளம்பெண் ஊழியர் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், நீங்கள் என்னை தாக்கியதற்காக நான் காவல்துறையில் புகார் அளிப்பேன் என்று கூறியுள்ளார். அதற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த நான்கு பெண்களும் ' உன்னால் முடிந்தால் போய் புகார் செய்' என்று ஆணவமாக பதில் கூறியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட இளம் பெண் ஊழியர் அருகிலிருந்த வீட்டில் பதுங்கி இருந்து தன்னை காப்பாற்றிக் கொண்டு உள்ளார். எதற்காக இந்த நான்கு பெண்களும் இந்த இளம் பெண் ஊழியரை தாக்கினார்கள் என்ற காரணம் இதுவரை தெரியவில்லை.

ஆனால் இந்த நான்கு பெண்களையும் பார்த்து அந்த பெண் ஊழியர் முறைத்தததன் காரணமாகவே, இந்தப் பெண்கள்  அப்பெண் ஊழியரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்தக் கொடூரமான தாக்குதல் சமூக வலைத்தளங்களில் பரவி பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேலும் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியுள்ள நிலையில் தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக பல்வேறு இளைஞர்கள், இளம்பெண்கள் இதுபோன்று உணவு டெலிவரி செய்யும் வேலைகளில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு பொதுமக்கள் இந்த ஊழியர்களை தாக்குவதால் இவர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

"சமூகத்தில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சுயமரியாதை என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒருவரின் சுயமரியாதைக் காப்பாற்றுவது அவர் சார்ந்திருக்கும் சமூகத்தின் மிகப்பெரிய கடமையாகும்.
சிறிய சிறிய விஷயங்களுக்காக வன்முறையில் ஈடுபடுவது ஆரோக்கியமான சூழல் ஆகாது."

இவ்வாறு டோமினோஸ் பீட்சா டெலிவரி செய்ய வந்த இளம்பெண் பாதிக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது பார்க்கும் மக்கள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

https://twitter.com/i/status/1536388136330489856  இந்த இணைப்பினூடாக அந்த பெண்ணை தாக்கும் காணொலிப் பதிவை பார்க்க முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .