Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜூன் 11 , பி.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தை சேர்ந்த நபருக்கும், மாண்டியா மாவட்டத்தில் வசித்து வந்த 21 வயது பெண்ணுக்கும் இடையே ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த நிலையில், அந்த பெண் பரப்பன அக்ரஹார காவல்துறையிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர், தன் திருமணம் முடிந்து ஓராண்டான போதும், கணவர் தன்னுடன் உடலுறவு வைத்துக்கொள்வதில்லை என்றும், தனக்கு அவர் விவாகரத்து அளிக்கவும் மறுக்கிறார் என கூறப்பட்டுள்ளது.
அவர் அடிக்கடி கோபப்படும் நபராக இருக்கிறார் என்றும், தான் நெருங்கி சென்று அன்பாக பேசினால் கூட அவர் சரியாக பேசுவதில்லை என்றும் என்னுடைய வாழ்க்கையை அவர் சீரழித்து விட்டார் எனவும் புகாரில் கூறியுள்ளார்.
உத்தர பிரதேசத்தின் அலகாபாத் உயர்நீதிமன்றம், வாழ்க்கை துணையுடன் நீண்ட காலம் உடலுறவை மறுப்பது, அவர்களை மனரீதியாக துன்புறுத்துவதற்கு சமம் என்று ஒரு விவாகரத்து வழக்கில் தெரிவித்திருந்தது. இணைந்து வாழும் தம்பதிக்கு இடையே, ஓராண்டாக உடலுறுவுக்கு மறுப்பது என்பது கொடூரத்திற்கு சமம் என புதுடெல்லி உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றில் அளித்த தீர்ப்பில் கூறியிருந்தது.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago