2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

உணவகமாக மாறிய ரயில் பெட்டிகள்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 16 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாராஷ்டிராவின் நாசிக்கில் பழைய ரயில் பெட்டிகளை  நட்சத்திர உணவகமாக மாற்றி அசத்தி உள்ளனர் ரயில்வே அதிகாரிகள். ரயில்வேயின் வருவாயை அதிகரிக்கவும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்குடனும், இந்த புதிய முயற்சி மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

நட்சத்திர உணவகங்கள் தோற்றுப்போகும் அளவிற்கு ஆச்சரியப்படுத்தும் வகையில் கண்கவர் வண்ணங்களில் உருமாற்றம் அடைந்துள்ள இந்த உணவகம், சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்துள்ளது.

ரயில் நிலையத்திற்கு உள்ளேயே ரயில் பெட்டிகளில் ரம்மியமான சூழலில் இது போல் உணவருந்துவது வித்தியாசமான அனுபவம் என்று கூறுகிறார் வாடிக்கையாளர் ஒருவர். சக்கரங்களுடன் கூடிய உணவுகளின் அரண்மனை என்றும் பலர் வர்ணித்து வருகின்றனர்.

2002 ஆம் ஆண்டு இதேபோன்று ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் ரயில் நிலையத்தில் செயல்படாத ரயில் பெட்டிகள் உணவகமாக மாற்றப்பட்டன. அந்த ரயில் பெட்டி உணவகம், பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு 24 மணிநேரமும் சிறப்பான சேவையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X