2024 மே 03, வெள்ளிக்கிழமை

’உருஸ்’ நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு

Mithuna   / 2024 பெப்ரவரி 04 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா நகரில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது தாஜ்மகால். 17-ம் நூற்றாண்டில் முகலாய மன்னர் ஷாஜகான், தனது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டிய இந்த தாஜ்மகால், இன்று இந்தியாவின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

மன்னர் ஷாஜகானின் நினைவு தினத்தை முன்னிட்டு தாஜ்மகாலில் ஒவ்வொரு ஆண்டும் 3 நாட்கள் 'உருஸ்' என்ற நிகழ்ச்சி அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் தாஜ்மகாலில் வரும் 6-ந்திகதி முதல் 8-ந்திகதி வரை 'உருஸ்' நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

ஷாஜகான் 'உருஸ்' ஒருங்கிணைப்பு குழுவினர் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இதற்காக தாஜ்மகாலுக்குள் இலவச அனுமதியும் வழங்கப்படுகிறது.

இந் நிலையில் தாஜ்மகாலில் 'உருஸ்' நிகழ்ச்சியை நடத்தும் குழுவினருக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்றும், தாஜ்மகாலில் 'உருஸ்' நிகழ்ச்சிக்காக வழங்கப்படும் இலவச அனுமதியை இரத்து செய்யக்கோரியும் 'அகில் பாரத் இந்து மகாசபை' சார்பில் ஆக்ரா நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .