Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Mithuna / 2024 ஜனவரி 21 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் டாக்டர் அம்பேத்கரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை 125 அடி உயரம் கொண்டது. இது 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதால், இதன் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது.
இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு ஸ்மிருதி வனம் என பெயரிடப்பட்டுள்ளது. அம்பேத்கரின் சிலைக்கு அருகே பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மைதானத்தில் மினி தியேட்டர், அருங்காட்சியகம், நீரூற்றுகள், வாகன நிறுத்துமிடம், உணவு விடுதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலையை ஆந்திர மாநில முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி வௌ்ளிக்கிழமை (19) திறந்து வைத்தார். இச்சிலை சமத்துவம், சமூக நீதியின் அடையாளம் என்பதால் 'சமூக நீதி'க்கான சிலை என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago