A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 21 , மு.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் உழைத்தால்தான் வெற்றி கிடைக்கும் என்று கட்சி நிர்வாகிகள் மத்தியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியது:
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவால்தான் ஆட்சியைப் பிடிக்க முடியும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். ஆனால், இந்த வெற்றியைச் சாதாரணமாக அடைந்துவிட முடியாது.
மந்திரத்தால் மாங்காய் பழுத்துவிடாது என்பதைப் போல, நாம் சாதாரணமாக வென்றுவிட முடியாது. அதற்கான உழைப்பைச் செலுத்த வேண்டும்.
ஒரு கட்சி, ஆட்சி அமைக்க 117 இடங்கள்தான் தேவை. ஆனால், 117 இடத்தை மட்டுமே பெறுவதற்காக நாம் தேர்தலைச் சந்திக்கவில்லை. அது பெருமை அல்ல.
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு 1971 தேர்தலில் 184 இடங்களில் வெற்றி பெற்று சரித்திர சாதனையைப் படைத்தோம். அந்த வெற்றியை அடைய வேண்டும்.
திமுகவினர் அனைவருக்கும் ஒரே ஒரு பொது நோக்கம்தான் இருக்க வேண்டும். எந்தத் தொகுதியாக இருந்தாலும் அந்தத் தொகுதியில் உதயசூரியன்தான் வேட்பாளர், கருணாநிதிதான் வேட்பாளர் என்ற எண்ணம்தான் இருக்க வேண்டும்.
யாருடன் கூட்டணி, யாருக்கு எத்தனை தொகுதி, என்னென்ன தொகுதி, யார் வேட்பாளர் என்பதை எல்லாம் தலைமை முடிவு செய்து கொள்ளும்.
வெற்றி பெறக்கூடியவர்கள்தான் வேட்பாளர்கள். உங்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பது வெற்றி என்ற ஒற்றை வார்த்தைதான் என்றார்.
29 minute ago
4 hours ago
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
4 hours ago
07 Mar 2026