A.K.M. Ramzy / 2021 ஜனவரி 06 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரோடு:
தி.மு.க.வினர் கவர்ச்சிகரமான திட்டங்களை கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர் எனக் குற்றம் சாடிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பெரியசாமி, துரைமுருகன், பொன்முடி, பெரியகருப்பன், பன்னீர்செல்வம், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது ஊழல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளதாகவும் தெரிவித்தார்.
பவானியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
இந்த வழக்குகளை விரைந்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்குகள் விசாரணைக்கு வரும்போது இவர்கள் பற்றி தெரியவரும்.
குடும்ப அரசியல் மட்டுமே தி.மு.க.வில் நடைபெற்று வருகிறது. ஸ்டாலின் தொடங்கி உதயநிதி, கனிமொழி, தயாநிதிமாறன் ஆகியோர் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இது மக்களை ஏமாற்றும் செயல். அ.தி.முக. ஆட்சி மட்டுமே மக்களுக்கான ஆட்சி. ஈரோடு மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டை வரும் தேர்தலிலும் நமது அரசு ஆட்சியை பிடிக்கும் என்றுபேசினார் முதலமைச்சர்.
14 minute ago
33 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
33 minute ago
49 minute ago