2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

’’எக்ஸ்போசாட்’’ மூலம் தகவல்கள் சேகரிப்பு

Mithuna   / 2024 பெப்ரவரி 16 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

விண்வெளியில் உள்ள நிறமாலை, தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான `நெபுலா' உள்ளிட்டவற்றை ஆராய, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) திட்டமிட்டிருந்தது. இதற்காக 'எக்ஸ்போசாட்' என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்திருந்தது.

இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, கடந்த மாதம் 1-ந்திகதி பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் மூலம் இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. பூமியில் இருந்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் புவி வட்டப்பாதையில் செயற்கைகோள் நிலை நிறுத்தப்பட்டது. அதில் இருந்து தற்போது விண்வெளி தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, “இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்ட 'எக்ஸ்போசாட்' செயற்கைகோள், பூமியில் இருந்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் குறைந்த புவி சுற்றுப்பாதையில் இயங்கி வருகிறது. இதில் இந்திய எக்ஸ்ரே 'போலரிமீட்டர்' (போலிக்ஸ்) மற்றும் எக்ஸ்ரே 'ஸ்பெக்ட்ரோஸ்கோபி' ஆகிய 2 கருவிகள் உள்ளன.

இதில் போலரி மீட்டர் அறிவியல் ஆய்வுகளை தொடங்கியுள்ளது. குறிப்பாக 'போலிக்ஸ்' என்ற கருவி வாயுக்களில் உள்ள மேகக்கூட்டங்கள் குறித்து ஆய்வு செய்து விண்மீன் மண்டலத்தில் உள்ள தரவுகள், புகைப்படங்களை சேகரித்துள்ளது” என தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X