2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

எடப்பாடியில் இன்று தேர்தல் பிரசாரம் ஆரம்பம்

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 19 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரத்தை தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் சனிக்கிழமை முதல் தொடங்க உள்ளதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் புகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகள், சட்டப் பேரவை உறுப்பினர்களுடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார். சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக அதிமுகவின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரிய சோரகையில் உள்ள சென்றாயப் பெருமாள் ஆலயத்தில் இன்று சனிக்கிழமை பூஜை செய்து விட்டு முதல்கட்டமாக எனது சொந்தத் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறேன்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .