Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜூலை 13 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹரியானா, அசாம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால், காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவர்களது வாழ்வாதாரங்களை இழந்தும் வாழ்விடங்களை இழந்தும் அவதிப்படுகின்றனர். பொதுமக்களுக்கு நிவாரண முகாம்களில் தங்குவதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஹரியானா மாநிலம் அம்பாலாவில் வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மனோகர்லால் கட்டார், ஹெலிகொப்டரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது, தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் இராணுவத்தை அழைத்துள்ளதாக தெரிவித்தார். இதற்கிடையே, உள்துறை அமைச்சர் அனில் விஜ்-ஜின் இல்லத்தையும் வெள்ளம் சூழ்ந்தது. குலா பகுதியில் வெள்ளப் பாதிப்பை பார்வையிட சென்ற எம்எல்ஏ ஈஸ்வர் சிங்கை, ஏன் இங்கு வந்தீர்கள் எனக் கூறி பெண் ஒருவர் கன்னத்தில் அறைந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
2 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago