2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

எம்.ஜி.ஆரின் பெயரை சுயநலனுக்காக கமல் பயன்படுத்துகிறார்

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 19 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்தர்ப்பம், சுயநலனுக்காக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பெயரை கமல்ஹாசன் பயன்படுத்துவதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் நேற்றுவெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு, செய்தியாளர்களுக்கு அளித்த விளக்கத்திலேயே அவர் தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர். பற்றி பேசி அதிமுகவின் வாக்குகளைப் பெற கமல் முயற்சிக்கிறார். எம்.ஜி.ஆரை எந்தக் கட்சியினரும் உரிமை கொண்டாட முடியாது. அவரை ஏன் புரட்சித் தலைவர் எனக் கூற கமல் மறுக்கிறார். சுயநலனுக்காக வும், சந்தர்ப்பத்துக்காகவும் எம்.ஜி.ஆர். பெயரை அவர் பயன்படுத்துகிறார்.

கலாசார சீரழிவு, குடும்பச் சீரழிவுக்கு வழிவகுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் கமல்ஹாசன் மக்களுக்கு எப்படி நல்லது செய்வார் எனக் கேள்வி எழுப்பினார் அமைச்சர்  ஜெயக்குமார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .