A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 22 , மு.ப. 08:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
எம்.ஜி.ஆரின் பிறந்த நாளான ஜனவரி 17ஆம் திகதி கட்சி தொடங்க ரஜினிகாந்த் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், ‘‘ஜனவரியில் புதிய கட்சி தொடங்குவேன். அதற்கான திகதியை டிசம்பர் 31ஆம் திகதி அறிவிப்பேன்’’ என்று தெரிவித்தார். இதையடுத்து, கட்சி தொடங்குவது தொடர்பான அனைத்து பணிகளும் முடுக்கி விடப்பட்டு ள்ளன. மாவட்டச் செயலாளர்களுடன் அவ்வப்போது ஆலோசனையும் நடத்தி வருகிறார்.
மாநிலம் முழுவதும் தகுதியானவர்களை 'பூத் கமிட்டி' நிர்வாகிகளாக நியமிப்பதுடன், அவர்களது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை ரஜினி மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நிர்வாகிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, கட்சியின் பெயர், சின்னம் பெறுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை சமர்ப்பிப்பதை உரிய நேரத்தில் முடிக்கும் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.
ஏற்கெனவே, தனியார் கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், ‘எம்ஜிஆர் ஆட்சியை வழங்குவேன்’ என்று தெரிவித்திருந்தார்.
தற்போது கமல்ஹாசன் உள்ளிட்டோரும் எம்.ஜி.ஆர் பெயரை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தி வருகின்றனர். தமிழக மக்களைக் கவர்வதற்கு கட்சிகளுக்கு எம்ஜிஆர் இன்னும் தேவைப்படுகிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
31 minute ago
4 hours ago
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
4 hours ago
07 Mar 2026