A.K.M. Ramzy / 2021 ஜனவரி 24 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி:
பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமடைந்த சூழலில், ராஞ்சி நகரில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
அதன்பின் மாநில மருத்துவ சபை அளித்த பரிந்துரையின் பேரில் அவரை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது என முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக ரிம்ஸ் மருத்துவமனை இயக்குநர் கூறுகையில், கடந்த 2 நாள்களாக லாலுவுக்கு மூச்சு விடுவதில் சிரமம் உள்ளது. வெள்ளிக்கிழமை நிமோனியா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டது.
அவரது வயதை கருத்தில் கொண்டு, டொக்டர்களின் அறிவுரைப்படி டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்நிலையில், லாலு பிரசாத்தின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago