2025 ஜூலை 19, சனிக்கிழமை

எலியை விழுங்கி மயங்கிய பாம்பு

Freelancer   / 2023 ஜூலை 05 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடலூர் அருகே உள்ள திருச்சோபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவர் அலுமினிய வியாபாரம் செய்து வருகிறார். இவர் வீட்டு வாசலில் சாரைப்பாம்பு ஒன்று மயங்கிய நிலையில் கிடந்தது.

இந்த நிலையில் ஏழுமலை சமூக ஆர்வலரான செல்லாவிற்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலை தொடர்ந்து செல்லா அங்கு சென்று பார்த்தபோது மயங்கி நிலையில் கிடந்த பாம்பிற்கு தண்ணீர் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

அந்த பாம்பு அவர் கொடுத்த தண்ணீரை அழகாக குடிக்க தொடங்கியது. பிறகு பாம்பு தெளிவடைந்து விட்ட நிலையில் அந்தப் பாம்பை பாட்டிலில் பிடித்து பாதுகாப்பான இடத்தில் விட்டார். அதாவது எலிகளுக்காக வைக்கப்படும் விஷத்தை எலி சாப்பிட்டு மயங்கி நிலையில் இருக்கும்போது அதனை பாம்பு விழுங்கிவிட்டால் இதுபோன்று மயக்கம் அடைந்து விடும் என செல்லா தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X