2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஏற்றுமதி முட்டைக்கு விலை நிர்ணயம்

Freelancer   / 2023 மே 02 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாமக்கல்

ஏற்றுமதி முட்டைக்குத் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) முதல்முறையாக விலை நிர்ணயம் செய்கிறது என தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் சிங்கராஜ் தெரிவித்தார்.

 நிர்ணயம் செய்யும் விலைக்கே பண்ணையாளர்கள், வியாபாரிகள் முட்டையை விற்பனை செய்யவேண்டும். ஏற்றுமதி முட்டைக்கும் முதல்முறையாக என்இசிசி விலை நிர்ணயம் செய்கிறது.

சந்தை நிலவரத்தைப் பொறுத்து தினசரி முட்டை விலை நிர்ணயம் செய்யப்படும். நாமக்கல்லிலிருந்து முட்டை கொண்டு செல்லும் இடம் வரை போக்குவரத்து செலவைக் கணக்கிட்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

  80 வாரம் கடந்த வயது முதிர்ந்த கோழியை உடனடியாக விற்பனை செய்ய வேண்டும். அப்போதுதான் கோழிக்கும், முட்டைக்கும் நல்ல விலை கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .