Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 ஒக்டோபர் 17 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருப்பதி ஏழுமலையானை 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தரிசிக்க ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஒதுக்கீடு, 19ஆம் திகதி காலை 10 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளன.
இந்தச் சேவை டிக்கெட்டுகளை எலக்ட்ரானிக் டிப் செய்வதற்கான ஒன்லைன் பதிவு 21ஆம் திகதி காலை 10 மணி வரை செய்யலாம். இந்த டிக்கெட்டுகளை பெறுபவர்கள் 21ஆம் திகதியில் இருந்து 23ஆம் திகதி வரை மதியம் 12 மணிக்குள் பணம் செலுத்தினால் லக்கி டிப்பில் டிக்கெட்டுகள் ஒதுக்கப்படும்.
22ஆம் திகதி காலை 10 மணியளவில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளான கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்படும்.
உற்சவ சேவைகளுக்கான ஒதுக்கீடு, அவற்றின் தரிசன ஸ்லாட்டுகள் 22ஆம் திகதி மாலை 3 மணியளவில் ஒன்லைனில் வெளியிடப்படும்.
அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீடு 23ஆம் திகதி காலை 10 மணியளவில் ஒன்லைனில் வெளியிடப்படும்.
ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கான தரிசன டிக்கெட் ஒன்லைன் ஒதுக்கீடு 23ஆம் திகதி காலை 11 மணியளவில் வெளியிடப்படும்.
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோய் வாய்ப்பட்டவர்கள் ஏழுமலையானை தரிசிக்க ஏதுவாக இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் 23ஆம் திகதி மாலை 3 மணியளவில் வெளியிடப்படுகின்றன.
சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் (ரூ.300) ஒதுக்கீடு 24ஆம் திகதி காலை 10 மணியளவில் வெளியிடப்படுகின்றன.
திருமலை, திருப்பதியில் ஜனவரி மாதத்துக்கான அறைகள் ஒதுக்கீடு 24ஆம் திகதி மாலை 3 மணியளவில் ஒன்லைனில் வெளியிடப்படும்.
https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago
2 hours ago