2025 ஜூலை 24, வியாழக்கிழமை

ஐபோன் மோகம்: டெலிவரி ஊழியரைக் கொலை செய்த இளைஞர்

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 20 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐபோன் மீது கொண்ட மோகத்தால் இளைஞர் ஒருவர் டெலிவரி ஊழியரை தீயிட்டு எரித்த  சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹேமந்த் தத்.  20 வயதான இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒன்லைன் மூலமாக 2 ஆம் தர ஐபோன் தொலைபேசியொன்றைக் கொள்வனவு செய்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 7ஆம் திகதி அன்று இவர் கொள்வனவு  செய்த ஐ போனை நாயக் என்பவர் டெலிவரி செய்வதற்காக அவரது வீட்டுக்கு வந்துள்ளார்.

இதன்போது தொலைபேசியைப் பெற்றுக் கொண்ட ஹேமந்த் , பணம் எடுத்து வருகிறேன் எனக் கூறி நாயக்கை தனது வீட்டுக்குள் வந்து இருக்குமாறு  அழைத்துள்ளார்.

உள்ளே சென்ற நாயக் பணத்திற்காக காத்திருந்த நிலையில், சமையல் அறைக்குள் சென்ற ஹேமந்த் கத்தியை எடுத்து வந்து  நாயக்கைக்  குத்தி கொலை செய்துள்ளார்.

பின்னர் அவரது உடலை சாக்குப்பையில் கட்டி வீட்டின் அருகே உள்ள வெற்றுக் காணியொன்றில்  பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.

இந்நிலையில் இக்கொடூரக்  கொலையைப் புரிந்து விட்டு தனது புது ஐ போனுடன் சுற்றிக்கொண்டிருந்த ஹேமந்த்தை சிசிடிவி ஆதாரங்கள் அடிப்படையில் கர்நாடகா  பொலிஸார் கைது செய்தனர்.

 இதன்போது ” ஐபோன் மீது கொண்ட மோகத்தினாலேயே தான் இவ்வாறு செய்ததாக ஹேமந்த் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .