Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூலை 13 , பி.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
அறுவை சிகிச்சை மூலம் கூட பிரிக்க முடியாத வீணா மற்றும் வாணி என்ற இரண்டு பெண்கள் தெலுங்கானா மாநில இன்டர்மீடியட் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பெண்கள் அதிக மதிப்பெண்கள் வாங்கி பொதுத் தேர்வுகளில் முன்னணியில் இருப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால், இந்த இரு பெண்களும் 70% சதவிகிதம் மதிப்பெண் வாங்கி, CA படிக்க விருப்பம் இருப்பதாக அடுத்த கட்டத்துக்கு செல்லவிருப்பது உண்மையில் மிகப்பெரிய சாதனை தான்.
உலகின் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களில், வீணா மற்றும் வாணியும் ஒருவர்! இரண்டு வெவ்வேறு பெண்களாக மற்ற உறுப்புகள் முழுமையாக இருந்தாலும், இவர்கள் இருவரின் தலையும் பிரிக்க முடியாது.
அன்றாட செயல்களே சவாலாக காணப்பட்டாலும், இந்த இரட்டைப் பெண்கள் அதை எளிதாக ஒவ்வொரு நாளும் கடந்து செல்கிறார்கள்.
இவர்கள் அமர்வது, சாப்பிடுவது என்று எல்லாவற்றிலும் தலை ஒட்டியிருப்பதால் அசௌகரியமாக இருக்கும் என்றாலும், இவர்களுக்கு பரீட்சை மண்டபத்தில் எந்த வித சலுகையும் வழங்கப்படவில்லை. மற்ற மாணவர்களைப் போலத் தான் இவர்களுக்கும் தேர்வுக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .