2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

ஒன்லைன் மூலம் பழகி சிறுமிக்கு பாலியல் தொல்லை

Freelancer   / 2022 ஜூலை 12 , பி.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை திருமுல்லைவாயல் பகுதியில் 10 வகுப்பு கற்கும் 15 வயது சிறுமி, செங்கல்பட்டு கொள்ளுமேடு அமனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞனுடன் ஒன்லைன் விளையாட்டு மூலம் பழகியுள்ளார். 

காதலிப்பதாக சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறிய இளைஞன் ஆபாசமாக வீடியோ அழைப்பில் பேச வற்புறுத்தி அதனை தனது கையடக்க தொலைபேசியில் பதிவு செய்து கொண்டார். பின்னர் அந்த வீடியோவை காட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். 

சிறுமியின் பெற்றோர் கடந்தமாதம் வெளியே சென்றிருந்த நேரத்தில் சிறுமியின் வீடு புகுந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அந்த நேரம் வீட்டுக்கு திரும்பி வந்த சிறுமியின் பெற்றோர், தனது வீட்டில் இளைஞன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போதுதான் சிறுமி நடந்த விவரங்களை பெற்றோரிடம் கூறி அழுதார்.

இதுபற்றி சிறுமியின் பெற்றோர் தட்டிக்கேட்டதற்கு , 'நீங்கள் என்னை ஒன்றும் செய்ய முடியாது. உங்கள் மகளின் ஆபாச வீடியோக்கள் என்னிடம் உள்ளன. ரூ.50 இலட்சம் கொடுத்தால் அந்த வீடியோக்களை அழித்து விடுவேன். இல்லை என்றால் அவற்றை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவேன். இதுபற்றி பொலிஸில் முறைப்பாடு செய்தால் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை கொலை செய்து விடுவேன்' என மிரட்டியுள்ளார்.  

எனினும், பெற்றோர் கொடுத்த முறைப்பாட்டை அடுத்து அவ்விளைஞன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X