2025 ஜூலை 30, புதன்கிழமை

ஒரு கிராம ஆண்களுக்கு பெண் கொடுக்க மறுக்கும் கிராமங்கள்

Editorial   / 2022 மே 06 , மு.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மராட்டியத்தில் உள்ள குன்றுப்பகுதி கிராமத்துக்கு புதிதாக திருமணமாகி வந்தார் பெண் குடத்தை அப்படியே போட்டுவிட்டு அம்மா வீட்டுக்குப் போனவர்தான். திரும்பி வரவேயில்லை.

இது ஒரு மணப்பெண்ணின் கதையில்லை. இந்தக் கிராமத்துக்கு எந்தப் பெண்ணும் வாக்கப்பட்டு வர விரும்புவதில்லை. வந்தாலும் அதிக காலம் கணவருடன் வாழ்வதில்லை.  தாண்டிச்சி பாரி என்ற   கிராமத்தில் தாண்டவமாடும் கொடுமையான தண்ணீர்ப் பிரச்சினைதான் காரணம்.

சுமார் 300 பேர் வசிக்கும் இக்கிராமத்தில் குடிநீர்ப் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாகும் மார்ச் முதல் ஜூன் வரையிலான கோடை காலத்தில் அது உச்சம் பெறும்.

குன்றின் கிடுகிடு சரிவுப் பாதையில் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் கீழே இறங்க வேண்டும்.  அடிவாரத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் கண்ணீர் போல தண்ணீர் கசியும் ஒரு பாறை ஊற்றின் முன் மணிக்கணக்கில் தவமிருக்க வேண்டும். சிறிய பாத்திரத்தில் சிறிது சிறிதாய் தண்ணீரை முகர்ந்து குடத்தில் ஊற்றி நிரப்ப வேண்டும். பின்னர் குடத்தை தலையில் வைத்து (சில சமயங்களில் ஒன்றின் மீது ஒன்றாக இரண்டு குடம்) குன்றுப் பாதையில் கவனமாக அடிவைத்து ஏற வேண்டும்.

இங்கு ஒவ்வொரு குடும்பப் பெண்ணின் பிரதான வேலையே தண்ணீர் எடுத்துவருவதுதான். தினமும் 2 முறை இந்த ‘தண்ணீர்ப் பயணம்’ நடக்கும். அதிலும் முதல் பயணம் அதிகாலை 4 மணிக்கே தொடங்கிவிடும்.

சில சமயங்களில் ஒரு குடம் நிரம்புவதற்கே 3 மணி நேரம் வரை ஆகிவிடும் என்பதால், வீடு திரும்பும்போது இருட்டிவிடும்.

இப்படி கடுமையான தண்ணீர்ப் பிரச்சினை காரணமாகவே இந்தக் கிராம ஆண்களுக்கு பிற கிராமத்தினர் பெண் கொடுக்க முன்வருவதில்லை.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .