Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 ஜூலை 24 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
குஜராத்தில் ஆறு பேர் கொண்ட குழுவொன்று, போலி ஆவணங்கள் மூலம் கிராமம் ஒன்றையே விற்பனை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டம் தேகாமில் உள்ள ஜூனா பஹாடியா கிராமத்தில்தான் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
கடந்த மாதம் 13ஆம் திகதி, காந்திநகர் மாவட்டத்தின் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் ஒரு நில ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு அந்த நிலத்தை, ஆறு பேர் ராஜ்கோட்டைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த 13ஆம் திகதி விற்பனை செய்துள்ளனர்.
இதுதொடர்பாக 7 பேர் மீது பொலிஸில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதாவது அந்த நிலத்தில், 700க்கும் மேற்பட்ட மக்களும் 88 வீடுகளும் கொண்ட ஒரு முழு கிராமமும் விற்கப்பட்டிருப்பதுதான் ஆச்சர்யமான செய்தி. மோசடியான, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி 2 கோடி ரூபாய்க்கு இந்த நிலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதாவது, பிகாஜி தாக்கூர் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த நிலம், 1987லேயே ஒருசிலருக்கு விற்கப்பட்டுள்ளது. மீதி நிலம்தான் அவருக்குப் பிறகு அவரது சந்ததியினருக்கு சென்றுள்ளது.
இதில் நிலத்தை வாங்கியவர்கள் அதில் வீடு கட்டி குடியேறியுள்ளனர். அந்த வகையில் அங்கு தற்போது 88 குடும்பங்கள் உள்ளன. இந்த நிலையில்தான் பிகாஜி தாக்கூரின் வாரிசுகள் போலி ஆவணங்கள் மூலம் அவர்களுக்கு விற்ற இடத்தையும் சேர்த்து மொத்தமாய் விற்றுள்ளனர்.
அதாவது, இந்த நிலத்தின் உரிமையைக் காட்டி பிகாஜி தாக்கூரின் வாரிசுகள் கடன் வாங்கியுள்ளனர்.
அதனை ஈடுகட்டவே இந்த மொத்த கிராமத்தையும் விற்றிருப்பதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக பொலிஸார் புகார் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
38 minute ago
1 hours ago
2 hours ago