2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

ஒரு கோடியை தாண்டியது கொரோனா பாதிப்பு

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 19 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி

இந்தியாவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது. கொரோனாவில் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 95,50,712 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதா வது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,153 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு ஒரு கோடியை கடந்துள்ளது.

 

கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 95,50,712 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 95.40 ஆக உள்ளது.

கொரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர்  எண்ணிக்கை 3,08,751ஆகக் குறைந்துள்ளது. தொடர்ந்து 12வது நாளாக கொரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 இலட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

கொரோனா வைரஸால் நேற்று மட்டும் 347 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,45,136 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் உயிரிழப்பு 1.45 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 7ஆம் திகதி கொரோனா பாதிப்பு 20 இலட்சத்தையும், 23 ஆம் திகதி 30 இலட்சத்தையும், செப்டம்பர் 5 ஆம் திகதி 40  இலட்சத்தையும் எட்டியது.

செப்டம்பர் 16 ஆம் திகதி 50  இலட்சத்தையும், 28 ஆம் திகதி 60  இலட்சத்தையும், அக்டோபர் 11 ஆம் திகதி 70 இலட்சத்தையும் தொட்டது. 29 ஆம் திகதி 80  இலட்சத்தையும், நவம்பர் 20 ஆம் திகதி 90 இலட்சத்தையும் கடந்துள்ளது''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .