2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

ஒரு மணி நேரம் ராமர் கோயில் மூட முடிவு

Mithuna   / 2024 பெப்ரவரி 19 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அயோத்தியில் ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு, கடந்த ஜன.22 ஆம் திகதி திறப்புவிழா நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துக் கொண்டு, ராமர் கோயிலை திறந்து வைத்தார். இந்த விழாவில், பல சினிமா, அரசியல் பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். அதன் பிறகு காலை முதல் இரவு வரையில் பொதுமக்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர். இதையடுத்து நாடெங்கிலும் இருந்து பக்தர்கள், அயோத்தி ராமர் கோயிலில் குவிந்து வருகின்றனர்.

பக்தர்களின் வசதிக்காக ரயில், விமான போக்குவரத்து சேவையும் அளிக்கப்பட்டு வருகின்றன. நாளுக்குநாள் அதிகரிக்கும் பக்தர்களின் கூட்டத்தை ஒழுங்கும்படுத்தும் பணியில் பொலிஸாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ராமர் ஓய்வு எடுக்கும் நேரம் குறித்து ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார்.

அதில், “ராம் லல்லா ஒரு 5 வயது குழந்தை. காலை 4 மணிக்கு தூக்கத்தில் இருந்து எழும் அவரால் நீண்ட நேரம் விழித்துக் கொண்டு இருக்க முடியாது. அதனால், ராமர் கோயில் கதவை மதியம் 12.30 முதல் 1.30 மணி வரை மூட முடிவெடுத்துள்ளோம். அப்போது தான் ராமரால் ஓய்வு எடுக்க முடியும்” என தெ​ரிவித்துள்ளார். இந்த முடிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூகவலைதளங்களில் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X