2026 மார்ச் 05, வியாழக்கிழமை

ஒரே ஓட்டோவில் 27 பேர் சவாரி

Freelancer   / 2022 ஜூலை 12 , பி.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தரப் பிரதேச மாநிலம் பதேப்பூரிலுள்ள பிந்த்கி கோட்வாலி என்ற பகுதியில்  ஓட்டோவொன்று விதிகளை மீறி அதி வேகமாக பயணித்துள்ளது. அதனை பொலிஸார் அவதானித்து, பின்தொடர்ந்து சென்று நிறுதித்தினர்.

ஓட்டோவை எதற்காக இவ்வளவு வேகமாக ஓட்டி செல்கிறீர்கள், சவாரி செய்வோரையும் கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். அந்த ஓட்டோவில் இருந்து பயணிகள் ஒவ்வொருவராக கீழே இறங்கியதை பார்த்த போதுதான் பொலிஸார் வாயடைத்து அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

அதிகபட்சமாக 6 பேர் மட்டுமே பயணம் செய்யக் கூடிய ஓட்டோவில் 27 பேரை ஏற்றி சவாரி செய்துள்ளார். இந்த ஓட்டோக்காரர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் இந்த 27 பேரில் அடக்குகின்றனர். அவரை கைது செய்து செய்த பொலிஸார், ஓட்டோவையும் பொலிஸ் நிலையத்துக்கு ஓட்டிச் சென்றுவிட்டனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .