2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ஒரே நாளில் மூன்று முறை கொரோனா தடுப்பூசி!

A.K.M. Ramzy   / 2021 ஜூன் 30 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி

மஹாராஷ்டிர மாநிலத்தில் ஒரு பெண்ணுக்கு ஒரே நாளில் மூன்று முறை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம், தானே மாநகராட்சி அலுவலர் ஒருவரின் மனைவி, முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள, சமீபத்தில் மாநகராட்சி நடத்திய முகாமுக்கு சென்றார். அங்கு அவருக்கு மூன்று முறை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். வீட்டுக்குச் சென்ற பின், கணவரிடம் இது குறித்து அவர் கூறியுள்ளார்.

 

பதற்றம் அடைந்த அவர், மாநகராட்சி சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். பரிசோதனை நடத்திய அதிகாரிகள், அந்த பெண் நலமுடன் இருப்பதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

அந்தப் பெண்ணின் கணவர், 'தடுப்பூசி செலுத்திய பின் என் மனைவிக்கு லேசான காய்ச்சல் இருந்தது. குடும்ப மருத்துவரிடம் சென்றோம். அவர் கொடுத்த மருந்துகளை சாப்பிட்ட பின் எந்தப் பிரச்சினையும் இல்லை' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X