Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 பெப்ரவரி 09 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கன்னடா, மங்களூருவில் தனியார் தாதியர் கல்லூரியொன்று இயங்கி வருகின்றது.
இக்கல்லூரியில் மங்களூரு மட்டுமல்லாது வெளிமாவட்டம் மற்றும் கேரளாவை சேர்ந்த ஏராளமான மாணவிகள் விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 5ஆம் திகதி குறித்த விடுதியில் இரவு உணவை உட்கொண்ட சுமார் 137 மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மாணவிகளுக்கு வைத்திய சாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவர்களில் 14 மாணவிகளின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த விடுதியில் மாணவிகளுக்கு தரமில்லாத உணவு வழங்கியதால் தான் அவர்களுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து குறித்த கல்லூரி மீதும், அதன் விடுதியின் மீதும் பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 hours ago
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Jul 2025