Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 17 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரே நாளில் இந்தியாவில் இரண்டு இடங்களில் நிலடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.
டெல்லியில், திங்கட்கிழமை (17) காலை 5.36 மணியளவில், 4.0 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கம் டெல்லியின் சுற்றுப்புறங்களிலும் உணரப்பட்டுள்ளது.
இதனால், அதிகாலையில் தூங்கி கொண்டிருந்த மக்கள் அச்சமடைந்து தஞ்சம் தேடி வீடுகளை விட்டு வெளியே வந்தனர். இதேபோன்று, டெல்லியில் ரயில்வே நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பயணிகளும் நிலநடுக்கம் உணரப்பட்டது என தெரிவித்துள்ளனர்.
ரயில்வே நிலையத்தில் உள்ள கடைகளில் நின்றிருந்த வாடிக்கையாளர்கள் நிலநடுக்கம் ஏற்பட்டதும் அலறியடித்தபடி ஓடினர்.
ரயில் பயணிகளில் ஒருவர் கூறும்போது,
“நான் ரயிலுக்காக காத்திருந்தேன். அப்போது, கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனை உணர்ந்தேன். ரயில் நிலையத்துக்கு கீழே வேறு ஏதேனும் ரெயில் செல்கிறதோ என்று அச்சமடைந்து விட்டேன்” என்றார்.
வேறொருவர் கூறும்போது,
“நிலநடுக்கம் வலிமையாக இருந்தது. இதுபோன்று இதற்கு முன்பு நான் உணர்ந்ததில்லை. முழு கட்டிடமும் குலுங்கியது” என கூறியுள்ளார்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
இதேவேளை, பீகாரிலும் திங்கட்கிழமை (17) காலை 8.02 மணியளவி நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவானதாக, தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 25.93 பாகை வடக்கு அட்சரேகையிலும், 84.42 பாகை கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .