2025 ஜூலை 30, புதன்கிழமை

ஒற்றை காலுடன் பாடசாலை செல்லும் மாணவர்

Freelancer   / 2022 ஜூன் 02 , மு.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய நவநாகரீக உலகில்,  பக்கத்தில் செல்வதற்கு கூட வாகனங்களை தான் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால், காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த மாணவர் ஒற்றை காலுடன் மூன்று கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்று வருகிறார்.

இவரது பெயர் பர்வேஷ் அஹமது. அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். சமீபத்தில் நடந்த விபத்தில், இடதுகாலை இழந்தார். அவரது குடும்பம் வறுமையில் வாடியதால், செயற்கை கால் பொருத்துவற்கான பண வசதி இல்லை. 

இருந்த போதிலும், பர்வேஷ் தனது தன்னம்பிக்கையை இழக்கவில்லை. இவருக்கு எதிர்காலத்தில் டொக்டராகி சமூகத்துக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற இலட்சியம் உள்ளது.
இதனால் எப்படியும் தனது கனவை நனவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், வீட்டுக்குள் முடங்கி விடாமல்,  தினமும் பாடசாலைக்கு மூன்று கிலோ மீற்றர் தூரம் ஒற்றை காலுடன் நடந்தே செல்கிறார்.

இதற்காக காலையும் மாலையும் புத்தக பையை தோளில் சுமந்து கொண்டு ஒரு காலுடன் நடந்தே சென்று வருகிறார்.

இதற்கு ஒருமணி நேரம் ஆகிறது. கஷ்டப்பட்டாலும் தனது குறிக்கோளை அடையும் வரை போராடுவேன் என அவர் நம்பிக்கையுடன் தெரிவித்து உள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .