2025 ஜூலை 31, வியாழக்கிழமை

ஓடும் மோட்டார் சைக்கிளில் இளம்பெண் சல்லாபம்

Editorial   / 2022 ஏப்ரல் 24 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாம்ராஜ்நகர்:

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை (தாலுகா) டவுன் அருகே செல்லும் சாலையில் ஒரு காதல் ஜோடி வௌ்ளிக்கிழமை காலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

திடீரென அந்த இளம்பெண் மோட்டார் சைக்கிளின் முன்பக்கம் அமர்ந்தார். அவர் முன்பக்கம் தனது காதலனை பார்த்தவாறு அமர்ந்து இறுக அணைத்துக் கொண்டார்.

மேலும் இருவரும் சில்மிஷத்திலும், சல்லாபத்திலும் ஈடுபட்டனர். ஆனால் காதலன், மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் அப்படியே ஓட்டிச் சென்றார்.

இதை அந்த வழியாக சென்ற பலரும் பார்த்து முகம் சுழித்தனர்.இ இருப்பினும் அந்த காதல் ஜோடி தங்களை மறந்து உல்லாச வானில் பறந்தபடி மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

இதுதொடர்பாக வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .