2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

’ஓபிஎஸுக்கு சசிகலா மரண அடி’

A.K.M. Ramzy   / 2021 ஜூலை 05 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேனி:

அண்ணா திராவிட முன்னேற்ற கழக ( அதிமுக) ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரில் சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசியலில் இருந்து விலகி இருக்கப் போவதாக அறிவித்திருந்த சசிகலா, சமீப காலமாக அதிமுக பிரமுகர்கள் சிலருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.

இந்நிலையில் மதுரை உள்ளிட்ட சில பகுதிகளில் சசிகலா அதிமுகவை தலைமை தாங்க வர வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த சில நாட்களாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. இது சசிகலா ஆதரவாளர்களால் ஒட்டப்படுகிறதா, அல்லது அதிமுகவுக்கு உள்ளே இருக்கக்கூடிய சில அதிருப்தியாளர்கள் இந்த வேலையை செய்கிறார்களா என்பது பற்றி விசாரித்து வருகிறது கட்சித் தலைமை.

 தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் போடிநாயக்கனுர் பகுதியில் இப்படி போஸ்டர்கள் உள்ளன. அஇஅதிமுக வின் சார்பாக கழகத்தை வழிநடத்த வருகை தரும் சின்னம்மாவை வரவேற்பதாக ஒட்டப்பட்டுள்ளன அந்த போஸ்டர்கள்.

  ஒருங்கினைப்பாளர் ஒ பன்னீர்செல்லத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் மட்டுமல்லாது சட்டமன்ற உறுப்பினராக உள்ள போடிநாயக்கனூரிலும் 'சின்னமா' எனக் குறிப்பிட்டு அதிமுகவுக்கு சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது அஇஅதிமுக நிர்வாகிகள் மத்தியில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்துள்ள, ஒபிஎஸ் ஆதரவாளர்கள் இது சம்மந்தமாக தற்போது உள்ளூர் சசிகலா ஆதரவு பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X