A.K.M. Ramzy / 2021 ஜனவரி 28 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோல்கட்டா:
பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளார்.
பி.சி.சி.ஐ., எனப்படும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைத் தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கெப்டனுமான சௌரவ் கங்குலிக்கு, கடந்த 2ஆம் திகதி சிறியளவில் மாரடைப்பு ஏற்பட்டது.
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில், அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது இருதயத்தில் உள்ள இரு அடைப்புகளை,இருதய அடைப்பை நீக்கும் சிகிச்சை அடிப்படையில் டொக்டர்கள் அகற்றினர்.
பின்னர் உடல்நிலை தேறிய கங்குலி, மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குச் சென்றார்.இந்நிலையில், நேற்று மீண்டும் கங்குலிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago