2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கட்சித் தொண்டர்கள் மீது வெடிகுண்டு வீச்சு; இருவர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 07 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அண்மையில் மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரு  தொண்டர்கள் மீது மர்ம நபர்கள் சிலர் வெடிகுண்டுகளை வீசிக்  கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிர்பூம் மாவட்டத்தில் நடந்து வரும் பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்ட இரு கட்சித் தொண்டர்கள் மீதே இவ்வாறு மர்ம நபர்கள் வெடிகுண்டுகளை வீசியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் படுகாயமடைந்த இருவரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இக்கொலைகளின் பின்னணியில் பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியினரும் இருப்பதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர்  குற்றம் சாட்டியுள்ளனர்.

அதேநேரத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் நிலவும் உட்கட்சி மோதலே இக்கொலைக்குக்  காரணமென பா.ஜ.கவும், காங்கிரஸும் பதிலடி கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .