2024 மே 04, சனிக்கிழமை

“கட்டணம் இல்லாத மின்சாரம்”

Mithuna   / 2024 பெப்ரவரி 05 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக அசாம் மாநிலம் சென்றிருந்தார். சுமார் 11,599 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், முடிந்த திட்டங்களை திறந்து வைத்தார்.

அப்போது பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-

“கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்க வேண்டும் பிரசாரத்தை நோக்கி ஓடினோம். தற்போது நாங்கள் கட்டணம் இல்லாமல் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்க வேண்டும் என்ற அடுத்த நகர்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.

இந்த பட்ஜெட்டில் மிகப்பெரிய அளவில் வீட்டின் மேற்கூரை மீது சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிப்பதற்கான சோலார் தகடுகள் அமைப்பது குறித்து மிகப்பெரிய அறிவிப்பு வெளியிட்டுள்ளோம். இந்த திட்டத்தின் கீழ், ஒரு கோடி குடும்பங்களுக்கு சோலார் தகடுகள் அமைப்பதற்கு மத்திய அரசு உதவி புரியும்.

மேலும், ஒவ்வொரு இந்திய குடிமகனின் வாழ்க்கையையும் வசதியானதாக்க வேண்டும் என்பதுதான் அரசின் இலக்கு. மத்திய அரசின் பட்ஜெட்டில் இது தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பட்ஜெடடில், 11 லட்சம் கோடி ரூபாய் கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .