Ilango Bharathy / 2023 பெப்ரவரி 27 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ‘பிரமோத் தாஸ்.‘ இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் சுக்லா தேவி என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். இத்தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென அவரது மனைவியும், தங்கையும் காணாமற்போயுள்ளனர். இதனால் அதிர்சியடைந்த அவர் காணாமற்போன இருவரையும் தேடிவந்துள்ளார்.

இந்நிலையில் அன்று இரவு அவருக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது. மறுமுனையில் பேசிய சுக்லா, தான் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும்,எனவே தன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
அடுத்தடுத்த நாட்களில்தான் இதன் பின்னால் இருந்த உண்மை தெரியவந்துள்ளது.
அதாவது திருமணத்தின் பின்னர் சுகலா தேவியும், தாஸின் தங்கையான சோனியும் நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர்.
நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறவே இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவை எடுத்துள்ளனர்.
இதனையடுத்தே இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு தனியாக வசிக்கத் தொடங்கியுள்ளனர்.
அத்துடன் சுக்லா தன்னை ஆண் போல காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக தலைமுடியை வெட்டி, நடை, உடை பாவனை என்பவற்றை மாற்றிக்கொண்டுள்ளதோடு, தனது பெயரையும் சூரஜ் குமார் என மாற்றியுள்ளார்.
நாளடைவில் இவர்களது காதலைப் புரிந்துகொண்ட கணவர் தாஸ் இதைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இவர்களது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
எனினும் தாஸின் தாயார் இந்திருமணத்தால் ஊரில் தன்னைப் பற்றி அவதூறாக பேசுவதாகக் கூறி தனது மகளான சோனுவை வலுக்கட்டாயமாக சுக்லாவிடமிருந்து பிரித்து அழைத்துச் சென்றுள்ளார்.
இச்சம்பவத்தையடுத்து சுக்லா தனது மாமியார் மீது புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago