A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மங்களூர்,
கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட மகனை அவனது தாய் கட்டியணைத்து கண்ணீர்விட்டு அழுதார். பின்னர் அவர் தனது மகன் மீட்கப்பட்டதால் தன்னுடைய உயிர் திரும்ப வந்திருப்பதாக கூறினார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று;
8 வயதுச் சிறுவன் தனது தாத்தாவுடன் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் அவனை தாத்தா கண்முன்னே கடத்திச் சென்று இருந்தார்கள். அவனை விடுவிக்க ரூ.17 கோடி யை மர்மநபர்கள் பேரம் பேசினர்.
கடத்தல் காரர்கள் 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதானவர்களிடம் இருந்து கடத்தப்பட்ட சிறுவன் மீட்கப்பட்டான்.
இந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் அனுபவ், பொலிஸ் நிலையத்தில் வைத்து அவனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.
இதுகுறித்து சிறுவன் அனுபவ் கூறுகையில்; கடத்தல்காரர்கள் என்னை கடத்தி சென்ற போது பயத்தில் இருந்தேன். அவர்கள் எனக்கு தேவையான அனைத்தும் கொடுத்தனர். ஆனால், நான் எதையும் எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு முறை மட்டும் தண்ணீர் குடித்தேன் என்றான்.
சம்பவம் பற்றி சிறுவனின் தாய் சாரியா கூறுகையில், எனது மகனை அவனது தாத்தா கண் முன்னே கடத்தல்காரர்கள் கடத்திச் சென்றனர்.
அவர் தடுக்க முயன்றார். ஆனால் 2 மர்மநபர்கள் அவரை தள்ளிவிட்டு எனது மகனை காரில் கடத்திச் சென்றனர்.
தற்போது எங்களது மகன் கிடைத்துவிட்டான். எனது உயிர் திரும்ப வந்துள்ளது. எனது மகனை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுத்த பொலிஸாருக்கு எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
5 hours ago
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
07 Mar 2026