Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூன் 14 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கதாநாயகி வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி துணை நடிகையை வீட்டிற்கு அழைத்த ஒளிப்பதிவாளர், அவரை மது அருந்த வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொளத்தூரை சேர்ந்த 22 வயதான இளம் பெண். இவர், சின்னத்திரையில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் நடித்து வரும் அதே சின்னத்திரையில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருபவர் வளசரவாக்கம், ஓம் சக்தி நகர் பிரதான சாலையை சேர்ந்த காசிநாதன் (43 ) பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெளியாகிய பல்வேறு சீரியல்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், அதை காரணமாக வைத்துக்கொண்டு கொளத்தூரை சேர்ந்த அந்த பெண்ணுக்கு சீரியலில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.
அதை நம்பி அங்கு வந்த அந்த பெண்ணுக்கு காசிநாதன் மது வாங்கி கொடுத்து அவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து காசிநாதன் அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அந்த பெண் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே அவர் வலுக்கட்டாயமாக பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் கூறப்படுகிறது.
வீட்டை பூட்டி வைத்து காசிநாதன் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ள அந்த பெண் தப்பிக்க வழி தெரியாமல் தனது நண்பருக்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து, அங்கு வந்த அந்த பெண்ணின் நண்பர் அந்த பெண்ணை பத்திரமாக மீட்டதுடன், பொலிஸில் புகாரும் அளித்ததை தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த பொலிஸார் காசிநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், நடிகையாக வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 minute ago
51 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
51 minute ago
2 hours ago