2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

கதிரைகளுக்கு உரையாற்றிய மோடி

Ilango Bharathy   / 2022 மார்ச் 01 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூற்றுக் கணக்கான வெற்றுக் கதிரைகளுக்கு முன் இந்திய பிரதமர் மோடி உரையாற்றிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் ( 27 ) இடம்பெற்றுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள சம்பூர்ணானந்த் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த மாநாட்டிற்கு பிரதமர் மோடி தாமதமாக  வருகை தந்ததாகவும், இதனால் அம்மாநாட்டிற்கு வருகை வந்த சுமார் 20, 000 க்கும் மேற்பட்டவர்கள் அவ் இடத்தை விட்டு வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெற்றுக் கதிரைகளுக்கு முன் பிரதமர் மோடி உரையாற்றிய வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X