2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கதிரையில் அமர்ந்த பொலிஸ் அதிகாரி இடை நீக்கம்

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 01 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாமக்கல்லில் கடந்த 28ஆம் திகதியன்று அரசு சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வைக்கும் விழாவொன்று நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட பல பிரமுகர்கள்  பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில் குறித்த நிகழ்வில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது,  பாதுகாப்பு பணியில் இருந்த நாமக்கல்லைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர்  ஒருவர் தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தாமல்,கதிரையில் அமர்ந்தவாறு  தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்துள்ளார்.

இது குறித்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, குறித்த  பொலிஸ் அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .