A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறார். செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.
இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற உன்னதமான நோக்கத்துடன், கட்சித் தலைவர் கமல்ஹாசன் செயல்பட்டு வருகிறார். அவர் தனது இரண்டாம் கட்ட பிரசாரத்தை டிசம்பர் 20, 21, 22 ஆகிய திகதிகளில் காஞ்சிபுரம், விழுப்புரம் மண்டலங்களில் மேற்கொள் கிறார்.
இதையொட்டி, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களின் கட்டமைப்பு மாவட்டச் செயலாளர்கள் அப்பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிகளை பொறுப்பேற்று செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல் நாளான இன்று மாலை 4 மணிக்கு ஆலந்தூரில் கமல் பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து, போரூர், பூந்தமல்லி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார்.
29 minute ago
4 hours ago
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
4 hours ago
07 Mar 2026