A.K.M. Ramzy / 2021 மார்ச் 09 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
கருணாநிதியை அவமானப்படுத்த 'மு.க.ஸ்டாலின்' எனக் கூறினாலே போதுமானது என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சச்கர நாற்காலியில் அமரும் வரை தான் அரசியலில் ஈடுபட விரும்பவில்லை எனத் தெரிவித்திருந்தார். இது, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியைக் குறிப்பதாக, திமுகவினர் கோபமடைந்தனர். இதையடுத்து, தான் கருணாநிதியைக் குறிப்பிடவில்லை எனவும், அவர் மீது தமக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது எனவும், கமல்ஹாசன் விளக்கம் அளித்தார். இந்நிலையில், நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்வொன்றில், கருணாநிதியை அவமானப்படுத்த 'மு.க.ஸ்டாலின்' என்று கூறினாலே போதுமானது என்று கமல் தெரிவித்தார்.
இதையடுத்து, நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கமலிடம், கருணாநிதியை அவமானப்படுத்த 'ஸ்டாலின்' என்று கூறினாலே போதுமானது என, நீங்கள் கூறியதன் அர்த்தம் என்ன என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு, "அந்தக் கூற்றே விளக்கத்தைக் கொண்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago