Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 ஜூலை 04 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா
மத்திய அரசாங்கத்தால் விரைவில் தாக்கல் செய்ய உள்ள 'ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவை சினிமா துறையினர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிப்பதாக தெரிவிக்கும் நடிகர் சூர்யா, 'இது, கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் செயல்' எனவும் கூறியுள்ளார்.
'தணிக்கை செய்யப்பட்டு, திரையில் ஓடிக் கொண்டிருக்கும் படங்களை, மறு தணிக்கை என்ற பெயரில் முடக்கும் அபாயம் இருக்கிறது' என, இயக்குனர் சீனு ராமசாமி கூறியுள்ளார்.
இது குறித்து, இரண்டு முறை தணிக்கை குழு உறுப்பினராக இருந்த, நடிகர் எஸ்.வி.சேகர் கூறியதாவது:நல்லவன் என்றைக்காவது, பொலிஸ்காரரைப் பார்த்து பயந்தது உண்டா; நலம் விசாரித்து விட்டு போய் விடுவான். திருடன், ரௌடி தான், பொலிஸாரைக் கண்டுபயப்படுவான்.
அப்படித்தான், மத்தியஅரசாங்கம் கொண்டு வர இருக்கும், 'ஒளிப்பதிவு திருத்த சட்டம் - 2021'ஐ பார்த்து பலரும் பயப்படுகின்றனர். இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பவர்கள், சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்க கூடிய காட்சிகளை அமைத்து படம்எடுப்பவர்கள், சட்டம், ஒழுங்குக்கு கேடு விளைவிப்பவர்கள், இந்திய சட்ட திட்டங்களுக்கு எதிராக படம் எடுப்பவர்களுக்கு, இந்த சட்ட திருத்தத்தால் சிக்கல் தான்.
சினிமாவில் உள்ள பலர், தணிக்கை சட்டங்கள் என்ன என்பதை, தெரிந்து கொள்ளாமலேயே படம் எடுத்து, சிக்கலில் மாட்டிக் கொள்ளும் போது, கதறுவது, பல காலமாக நடந்து வருகிறது.
5 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago